Top 10 similar words or synonyms for marmot

marmota    0.968505

caudatus    0.947715

funambulus    0.947234

kuhl    0.946512

heth    0.942464

dremomys    0.941235

sade    0.941231

waterhouse    0.940946

bir    0.940488

eptesicus    0.939815

Top 30 analogous words or synonyms for marmot

Article Example
மர்மோட் மர்மோட் (Marmot) என்பவை மர்மோட் பேரினத்தில் கொறிணி இனத்தைச் சேர்ந்த பெரிய அணில் ஆகும். இவ்வினத்தில் 15 வகைகள் உள்ளன. இவற்றுள் சில மலைப்பகுதிகளில் குறிப்பாக ஆல்ப்ஸ் மலை, வட அபென்னைன் மலை, கார்பத்தீய மலைகள், தத்ரா மலைகள் மற்றும் ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆசியாவில் பைரெனீசு மலைகளிலும் காணப்படுகின்றன. மேலும் சில வகைகள் வட அமெரிக்காவின் ராக்கி மலைத்தொடர், கருமலைகள், காஸ்கேடு மலைகள், பசிபிக் மலைகள் மற்றும் சியெரா நெவடா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியாவின் லடாக் பகுதியிலும் பாக்கிஸ்தானின் தியோசாய் தேசியப்பூங்காவிலும் சில வகைகள் காணப்படுகின்றன. சில வட அமெரிக்கப் புல்வெளிப் பிரதேசங்களிலும் யுரேசியப் புல்வெளிகளிலும் பரவி வாழ்கின்றன. இதே போன்ற அளவு மற்றும் உருவ ஒற்றுமையுள்ள ஓர் உயிரினம் தரை நாய் ஆகும். ஆனால் அது மர்மோட் இனத்தைச் சேர்ந்ததல்ல.
நீர் மின் ஆற்றல் நீர்மின் திட்டங்கள் அருகில் உள்ள சூழ்மண்டலத்தை பெரிதும் பாதிப்பவை. ஓடும் ஆறு, நீர் தேக்கமாக மாறும்போது, அதில் வாழும் நீர் விலங்குகள், அந்நீரில் படிவளர்ச்சியில் தோன்றிய பல உயிர்கள் பாதிப்படைகின்றன. எடுத்துக்காட்டுக்கு, அமெரிக்காவில் உள்ள பல அணைகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளில், ஆறுகளில் இயற்கையாக காணப்படும் சால்மன் இன மீன்களின் எண்ணிக்கை அணைகளால் பல மடங்கு குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இயற்கையாக, இவ்வகை மீன்களின் இனப்பெருக்க பகுதி ஆறுகளின் மூலப்பகுதிக்கு (தோன்றுமிடம்) அருகில் அமைந்திருப்பதாலும், நீர்தேக்கங்களினால் அவை அவ்விடத்தை அடைய முடியாமல் போனதாலும், சால்மன் சார்ந்த சூழ்மண்டலம் (சால்மன் மீனை உண்டு வாழும் பறவைகள், சால்மன் உண்ணும் நீர் தாவரம் ) முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனை தடுக்க மீன்கள் அணைகளையும் தாண்டி மேல் நீரோட்டம் செல்லுமாறு மீன் ஏணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைப் போன்று, கடலை நோக்கிச் செல்லும் கீழ்நீரோட்டத்தில் இனப்பெருக்கத்துக்குப் பின் சால்மன் மீன்கள் நீர்மின் நீர் விசைச்சுழலியின் வழியே செல்லும்போதும் பாதிக்கப்படுகின்றன. மீன்களைப் பாதுகாக்க அமெரிக்காவில் உள்ள மார்மாட் அணை (Marmot Dam) போன்ற சில அணைகள் உடைக்கப்பட்டும் உள்ளன. நீர் உயிரிகளுக்கு பாதிப்பு விளைவிக்காவண்ணம் இயங்கும் விசைச்சுழலி ஆய்வுகளும் பெருமளவில் நடைபெறுகின்றன.