Top 10 similar words or synonyms for bryggen

bukit    0.576933

victoria    0.573018

tenerife    0.568174

francisco    0.566163

salvador    0.564734

san    0.562629

wutai    0.559301

neri    0.558151

colombia    0.557833

spain    0.554519

Top 30 analogous words or synonyms for bryggen

Article Example
பேர்கன் நகர வரலாறு Bryggen சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதுடன், மிகப் பழமை வாய்ந்த கட்டடத் தொகுப்பைக் கொண்ட (counting house என்று அழைக்கப்படுகிறது) குடியிருப்பாக இருந்ததனால், யுனெஸ்கோவினால் 1972 இல் உருவாக்கப்பட்ட உலக பாரம்பரியக் களப் பட்டியலில் இல் 1979 ஆம் ஆண்டில் Bryggen உம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
பேர்கன் நகர வரலாறு சரித்திரத்தில் பல கால கட்டங்களில் பேர்கன் நகரானது பெரு நெருப்பின் தாக்கத்திற்கு உட்பட்டது. 1170 இல் முதன் முதலில் Bryggen பகுதியில் பெருநெருப்புனால் அழிவு ஏற்பட்டது. பின்னர் 1198 இல் Bagler என அழைக்கப்படும் ஒரு அமைப்பினர், தமது கட்டுப்பாட்டுக்குள் நகரின் சில பகுதிகளைக் கொண்டு வர முடியாமல் போன கோபத்தில் சில பகுதிகளை எரியூட்டி அழித்தனர். 1248 இல் மீண்டும் Bryggen உட்பட பல பகுதிகளும் 11 கிறிஸ்தவ தேவாலயங்களும் நெருப்பினால் அழிக்கப்பட்டன. பின்னர் 1393, 1428, 1429 ஆம் ஆண்டுகளில் ஜேர்மனிய கடல் கொள்ளையர்களால் நகரம் கொள்ளையடிக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. 1476 இல் சரக்குகள் நிறைந்த இடத்தில் ஆரம்பித்த நெருப்பு அழிவை ஏற்படுத்தியது. 1623 இல் Vågsbunnen இன் கரையோரப்பகுதி முற்றாக எரிந்து நாசமானது. 1702 இல் ஏற்பட்ட நெருப்பில் நகரின் 90% எரிந்து அழிந்தது. 1756 இல் கடற்கரையில் ஆரம்பித்த நெருப்பின் அழிவில் 1500 கட்டடங்கள் எரிந்து போயின. 1916 இல் ஏற்பட்ட நெருப்பில் 380 கட்டடங்கள் எரிந்தன. கடைசியாக 1955 இல் Bryggen இன் வடக்குப் பகுதி எரிந்தது. பேர்கனில் 36 தடவைகள் நெருப்பு அழிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பேர்கன் நகர வரலாறு 1360 ஆம் ஆண்டில் நோர்வேயை ஆண்ட ஒரு டென்மார்க் அரசனால், Hanseatic League என்றழைக்கப்பட்ட, ஜேர்மனிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டுக்குள் நோர்வேயின் வியாபாரம் வந்து சேர்ந்தது. Hansa வணிக அமைப்பின் முக்கியமான நான்கு அலுவலகங்கள் Bergen, Brugge, London og Novgorod ஆகிய நகரங்களில் அமைந்திருந்தது. பேர்கன் நகரில், Bryggen இலுள்ள இந்த கட்டடத் தொகுதி ஜேர்மனியர்கள் வசமாகியபோது, 1360 ஆம் ஆண்டில், ஜேர்மனிய வர்த்தகர்கள் தமது அலுவலகத்தை இந்த கட்டடத்தில் வைத்திருந்ததுடன், ஜேர்மனிய வியாபாரிகளே இந்த குடியிருப்புக்களில் இருந்தனர்.
பேர்கன் நகர வரலாறு எத்தனை பாதுகாப்புடன் இருந்தாலும், காலத்துக்கு காலம் இந்த குடியிருப்பு நெருப்பின் தாக்கத்துக்கு உட்படுவதும், மீள அமைக்கப்படுவது நடந்திருக்கின்றது. இந்த Bryggen கட்டடத் தொகுப்பில் காலத்துக்கு காலம் பல திருத்த வேலைகள் செய்யப்பட்டாலும், இது ஒரு பரம்பரைச் சொத்தாக கணிக்கப்பட்டு, அதே பழைய நிலையில் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றது. 1764 இல் நோர்வேஜிய அரசனால், மீண்டும் நோர்வேஜிய வர்த்தகர்கள் வசம் அந்த வர்த்தக முக்கியத்துவம் பெற்ற இடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போதும் சரித்திர முக்கியத்துவம் கருதி, அந்த இடம் அதே பழைய நிலையில் இருந்தாலும், அந்த கட்டடத் தொகுதியின் பகுதிகள், உல்லாசப்பயணிகளுக்கான பொருட்கள் விற்கப்படும் கடைகளால் நிறைந்து இருக்கின்றது. கடலை அண்டிய பகுதியில் அமைந்திருந்த மலசல கூடங்கள் நகரின் அழகு கருதி, அகற்றப்பட்டுவிட்டன.
பேர்கன் நகர வரலாறு பேர்கன் நகரின் மையப் பகுதியில் Bryggen என்றழைக்கப்படும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் உள்ளது. இப்பகுதியில், நகரின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்ட கட்டிடத் தொகுதி இருப்பதைக் காணலாம். இந்த கட்டிடத் தொகுதி 1070 ஆம் ஆண்டளவில் நோர்வேஜிய மக்களால் கட்டப்பட்டு இருந்தாலும், 1360 – 1764 காலப் பகுதியில் அந்த இடம், ஜேர்மனியர்கள் வசம் இருந்தபோது மிகவும் பிரசித்தமடைந்து இருந்தது. ஆரம்பத்தில் நோர்வேஜிய மக்கள் இந்த இடத்தை தமது வியாபார நோக்கத்திற்கு பாவித்து வந்தனர். இந்த கட்டடத் தொகுதிக்கு அண்மையாக கடல்நீரேரி வருவதனால், பெரிய கப்பல்களும் நேரடியாக, கட்டிடத் தொகுதிக்கு அண்மையாக கொண்டு வரப்படுவது வியாபாரிகளுக்கு இலகுவாக இருந்தது. பேர்கன் மிக முக்கிய பண்டமாற்று வியாபாரத் தலமாக அமைந்திருந்தது. நோர்வேயில் இருந்து உலர் மீன்கள் (dry fish) அதிகளவில் வெளிநாடுகளுக்கு சென்றது. இந்த உலர் மீன்கள் உப்பு சேர்க்கப்படாமல், காற்றில் உலர்த்தப்பட்டு பெறப்படுபவை. 1980 ஆம் ஆண்டளவில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்படும்வரை, நோர்வேயின் பொருளாதாரம் மீனிலும், கப்பல் கட்டும் தொழிலிலுமே தங்கி இருந்தது.